ஆஸ்திரேலிய அணியின் வலுவான அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸி அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் இப்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். அதனால் அந்த தொடரில் விளையாடுவாரா அல்லது அவருக்குப் பதில் மாற்றுவீரர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் வீரர்கள் டி 20 போட்டிகள் விளையாடவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்றார் போல உலகமெங்கும் லீக் போட்டிகளும் அதிகளவில் நடந்து வருகின்றன.