Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணியின் முக்கிய வீரரைத் தக்க வைத்த நிர்வாகம் !

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (15:46 IST)
சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் பலத்த ஏற்பாடுகளுடம் ஐபிஎல் 14 வது சீசன் நடைபெற்றது. சென்னை அணி தரப்பில் சின்ன தலை சுரேஷ் ரெய்னா தன் மாமா கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா திரும்பினார். அவருக்கும், நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி சூப்பர் லீக்கில் வெளியேறி அதிர்ச்சி யளித்தது. இதில் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் இல்லாததும் ஒரு காரணம்  எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை அணியில் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், சென்னை அணிக்கு தோனியே தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ஒரே நாளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேதார் ஜாதவ், பியூவ் சாவ்லா, முரளி விஜய்யை நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளதாகவும்  சுரேஷ் ரெய்னா , தோனி உள்ளிட்ட வீரர்களை தக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments