Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்பி வந்த ‘தல’ தோனி: கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (13:03 IST)
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கும் நிலையில் பயிற்சிக்காக மகேந்திரசிங் தோனி சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் கடைசியாக கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி அதற்கு பிறகு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு டெஸ்ட் மேட்சுகளுக்கும் பெயர் பட்டியல் வெளியாகும்போது அதில் தோனி பெயர் இருக்காதா என ஏங்கிய ரசிகர்களுக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே.

கிட்டத்தட்ட தோனி மைதானத்திற்குள் புகுந்து விளையாடி 7 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் மார்ச் முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி செய்ய இருக்கிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் சார்பாக விளையாடும் தோனி மார்ச் 3 முதல் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

நீண்ட மாதங்கள் கழித்து தோனி பயிற்சியில் ஈடுபட போகும் நிலையில் அதை காண ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். சென்னை வரும் தோனியை ஸ்டேடியத்தில் வரவேற்க பலர் பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments