ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 56 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.
இந்நிலையில் தலா 12 புள்ளிகளோடு இருக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால் இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.
சன் ரைஸர்ஸ் பிளேயிங் லெவன்
டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(w), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ்(c), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்
குயின்டன் டி காக், KL ராகுல்(w/c), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக்