ஆரம்பமே ஃபீல்டிங்ல சோலிய முடிக்கலாம்! – டாஸ் வென்ற பஞ்சாப் வியூகம்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (19:09 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோத உள்ளது.

கொல்கத்தா அணி இதுவரை 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெற கட்டாயமாக இன்று கொல்கத்தா அணி வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது.

பஞ்சாப் அணி 5 வெற்றி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நல்ல ஃபாமில் உள்ளது. இன்று இந்த அணி அதிரடி காட்டி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. சமீப கால ஆட்டங்களில் ஆரம்பத்தில் ஆடும் அணியின் ரன்ரேட்டை குறைத்து பின்னர் சேஸிங் செய்த அணிகள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் கிங்ஸ் லெவனின் இந்த வியூகம் பலிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments