Publish Date: Fri, 09 Dec 2022 (16:27 IST)
Updated Date: Fri, 09 Dec 2022 (16:36 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடக்க உள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங்கின் போது கேப்டன் ரோஹித் ஷர்மா காயமடைந்து வெளியேறினார். அதனால் அணியை வழிநடத்தும் பொறுப்பை கே எல் ராகுல் ஏற்றார். ஆனால் அதுவரை தடுமாறி வந்த பங்களாதேஷ் அணி அதன் பின்னர் மிகச்சிறப்பாக விளையாடி 271 ரன்கள் சேர்த்து, வெற்றியும் பெற்றது.
இதையடுத்து காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 3 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கடைசி போட்டிககான அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப்யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் தேர்வில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன.