Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

vinoth
வியாழன், 26 டிசம்பர் 2024 (09:32 IST)
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட்டில் அடித்த ஒரு சதத்தைத் தவிர மற்ற இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் முன்னாள் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நடந்த உரையாடலில் “நான் கடந்த சில இன்னிங்ஸ்களாக சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் ரன் சேர்க்க தேவையான ஒழுக்கமுறையப் பின்பற்றவில்லை.  இது டெஸ்ட் கிரிக்கெட் நமக்குக் கொடுக்கும் சவால். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதில் நான் அதிக பந்துகள் எதிர்கொண்டு களத்துக்கு மரியாதை செய்யப் போகிறேன். அதை நான் கர்வத்தோடு செய்யப் போகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments