Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

Siva
வியாழன், 26 டிசம்பர் 2024 (07:36 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் டெஸ்டில் இந்தியாவும் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில், இன்று நான்காவது டெஸ்ட் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சாம், ஜடேஜா பந்தில் அவுட் ஆன நிலையில், தற்போது உஸ்மான் மற்றும் லாபுசாஞ்சே பேட்டிங் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு112 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய போட்டியில், பும்ரா வீசிய ஏழாவது ஓவரில் 14 ரன்களும், 11வது ஓவரில் 18 ரன்களும் அடிக்கப்பட்டன. பும்ரா பந்து வீச்சை குறிவைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்திய வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments