Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 முறை சாதனை 2000 ரன்கள்… சங்ககராவை முந்தி கோலி படைத்த சாதனை!

7 முறை சாதனை 2000 ரன்கள்… சங்ககராவை முந்தி கோலி படைத்த சாதனை!
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:31 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், இந்திய பேட்டிங் வரிசையில் கே எல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 185 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் ஆடிய இந்திய அணி 131 ரன்கள் மட்டும் சேர்த்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த இன்னிங்ஸில் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடி  76 ரன்கள் சேர்த்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் 2023 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் 7 முறை 2000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கையின் சங்ககரா மட்டுமே 6 முறை சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்த மைலகல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த போட்டியில் வெற்றிபெற தகுதியே இல்லாத அணியாக இருந்தோம்… தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா!