இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது.
தற்போது 223 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்களை இழந்து வலுவான நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி யார்றா இந்த பையன்? என வியக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் கோன்ஸ்டாஸ் பேட் செய்துகொண்டிருந்த போது ஓவர்களுக்கு இடையில் கோலி நடக்கும் போது கோன்ஸ்டாண்டின் தோளில் உரசினார். இதையடுத்து இருவரும் முறைத்துப் பார்த்துக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது உஸ்மான் கவாஜா இருவரையும் சமாதானம் செய்து பிரித்து வைத்தார். ஆனால் அந்த சம்பவத்துக்கு அடுத்த ஓவரிலேயே பும்ராவை பவுண்டரிக்கு விளாசினார் கோன்ஸ்டாஸ்.