Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு குழந்தை பிறக்கப் போகிறது… தந்தையை போல கிரிக்கெட்டர் ஆகுமா? தாயைப் போல நடிகையாகுமா? –கோயங்க ட்வீட்!

ஒரு குழந்தை பிறக்கப் போகிறது… தந்தையை போல கிரிக்கெட்டர் ஆகுமா? தாயைப் போல நடிகையாகுமா? –கோயங்க ட்வீட்!
, சனி, 17 பிப்ரவரி 2024 (08:02 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதன் பின்னர் அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகினார்.

பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போன் செய்து தான் முழு தொடரில் இருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றாக இருந்த புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. அதில் “ஒரு குழந்தை இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. அந்த குழந்தை, தன்னுடைய தந்தையை போல இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புவோம். இல்லையென்றால் தாயைப் போல ஒரு சினிமா நடிகராக வருமா?” எனக் கூறியுள்ளார். இந்த ட்வீட் மறைமுகமாக கோலி மற்றும் அனுஷ்காவின் இரண்டாவது குழந்தையின் பிரசவத்தைப் பற்றிதான் குறிப்பிடுகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய வீரர் அஸ்வின் சாதனை..! இங்கிலாந்து அணி ரன் குவிப்பு.. 2-ஆம் நாள் ஆட்டநேர ஸ்கோர் என்ன..?