Publish Date: Thu, 31 Oct 2024 (08:36 IST)
Updated Date: Thu, 31 Oct 2024 (08:37 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது.
அதனால் தற்போது மெஹா ஏலத்துக்கான வீரர்களைத் தக்கவைப்பதில் கே கே ஆர் அணி ஸ்ரேயாஸை முதல் வீரராக தக்கவைக்கத் தயங்குகிறதாம். ரஸ்ஸல் மற்றும் சுனில் நரேனை முதல் மற்றும் நான்காம் வீரர்களாக 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்க விரும்புவதாகவும், ஸ்ரேயாஸை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் இருந்து கேப்டன்சியை மாற்றவும் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி கே கே ஆர் அணி ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஸ்டார்க் ஆகியோரையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த அணியில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஹர்ஷித் ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.