Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

Advertiesment
என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

vinoth

, வியாழன், 30 மே 2024 (11:21 IST)
இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் ஹர்ஷித் ராணா. ஆனால் அபிஷேக் போரலை அவுட் ஆக்கிய போது டெல்லி ஹர்ஷித் ராணா அவரை நோக்கி சர்ச்சைக்குரிய உடல்மொழியை செய்து அவருக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பினார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியின் 100 சதவீத சம்பளத்தையும் அபராதமாக விதித்ததுடன், அடுத்த ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதித்துள்ளது. அது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அந்த அணி கோப்பையை வென்ற பின்னர் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் அனைத்து வீரர்களையும் ப்ளையிங் கிஸ் கொடுக்க சொல்லி கேட்டு, அதன்படி அனைவரும் செய்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷித்ராணா “மைதானத்துக்கு வெளியே நான் அன்பானவன். ஆனால் களத்துக்குள் நான் நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வரவில்லை. அபிஷேக் போரல் என் ஓவரில் 16 ரன்களை சேர்த்தார். அவர் அப்படி சிக்ஸ்கள் அடிக்கும் போது உங்களால் சிரிக்க முடியுமா?. அடுத்த ஓவரில் நான் அவர் விக்கெட்டை எடுத்ததற்காக தடை செய்யப்பட்டேன்.” என்க கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!