Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சி எஸ் கே அணிக்கு புதிய தூதுவராக ஒப்பந்தம் ஆன பாலிவுட் நடிகை!

Advertiesment
தோனி
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தங்களின் புதிய ஸ்பான்சரை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிகாட் சி எஸ் கே அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் கால்பந்து அணிகளுக்கு அடுத்து முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் ஸ்பான்சராக இனைந்துள்ளது எதிகாட்.

இந்நிலையில் புதிய தூதுவராக சிஎஸ்கே அணியோடு இணைந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான காத்ரினா கைஃப். ஏற்கனவே காத்ரினா எதிகாட் நிறுவனத்துக்கும் தூதுவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி எஸ் கே அணிக்கு வந்தால் மட்டும் எப்படி எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள்- தோனி அளித்த பதில்!