சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி தலைமைப் பண்பு குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடக்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக Etihad Airways இணைந்துள்ளது. எனவே சென்னை அணியின் புதிய ஜெர்சி சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், தலைமைப் பண்பு குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தலைவராக இருக்கும் ஒருவர் மரியாதையைச் சம்பாதிப்பது மிகௌவ்ம் முக்கியம் என்று நான் கருதுகி றேன். ஏனென்றால் மரியாதை என்பது நாம் வகிக்கும் பதவியுடன் சேர்ந்து வரும் விஷயமல்ல. நமது செயல்பாடுகாளின் வாயிலாக வருவது. எனக்கு மரியாதை கொடுங்கல் என்று கேட்டுப் பெறுவது தவறு. அதை நீங்களாக சம்பாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்