Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அர்ஜுனை டெண்டுல்கரோடு ஒப்பிட வேண்டாம்! – கபில்தேவ் கருத்து!

Advertiesment
Arjun Tendulkar
, சனி, 4 ஜூன் 2022 (12:25 IST)
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனை தந்தையோடு ஒப்பிட்டு பேச வேண்டாம் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவனாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரும் கிரிக்கெட் வீரராக கருதப்படும் சச்சின் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியை நடத்தி வருகிறார்.

அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் தந்தை வழியிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் சச்சின் அளவுக்கு அர்ஜுன் தொடக்கத்திலேயே சாதனைகள் படைக்கவில்லை. இதனால் பலர் அர்ஜுனை அவரது தந்தை சச்சினுடன் கம்பேர் செய்து பேசி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் “சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருப்பதில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. தன் தந்தை போலவே தானும் வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்ததால் அழுத்தம் தாங்க முடியாமல் தனது பெயரையே மாற்றிக் கொண்டார் டான் ப்ராட்மேனின் மகன். எனவே அர்ஜுனை அவரது தந்தை சச்சினோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, ரோஹித் இல்லாத டி 20 உலகக்கோப்பை அணி…. தேர்வு செய்த முன்னாள் வீரர்!