Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷுப்மன் கில்லை விட கேப்டனாக தகுதியுள்ளவர் இவர்தான்… டிவில்லியர்ஸ் கருத்து!

Advertiesment
ஹர்திக் பாண்ட்யா
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (06:59 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பாண்ட்யாவுக்கு நன்றி தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது. 24 வயதகும் கில், ஐபிஎல் அணிகளை வழிநடத்தும் வயது குறைந்த கேப்டனாக மாறியுள்ளார்.

கில்லுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் “கில்லின் திறமை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பொறுப்பை ஏற்க அனுபவம் தேவை. குஜராத் அணியில் இருக்கும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை தந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND vs SA - டி20: சூர்யகுமார் தலைமையிலான இந்தியா அணி அறிவிப்பு