Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு...ரஷியாவில் தரையிறக்கம்...

Advertiesment
plane
, செவ்வாய், 6 ஜூன் 2023 (21:47 IST)
டெல்லியில் இருந்து  சான்பிரான்ஸ்கோவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து அமெரிக்கா நாட்டின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்திய விமானம்  புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிது  நேரத்தில் விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென்று பழுதடைந்ததாக கூறப்படும் நிலையில், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்திய விமானம் திருப்பி விடப்பட்டு, அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த  நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷியாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர்  அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!