Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் இன்னிங்ஸைப் பார்த்தது போல இருந்தது.. கோன்ஸ்டாஸைப் பாராட்டிய ஆஸி முன்னாள் வீரர்!

vinoth
வியாழன், 26 டிசம்பர் 2024 (09:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது.

தற்போது 168 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்களை இழந்து வலுவான நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி ‘யார்றா இந்த பையன்?’ என வியக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கோன்ஸ்டாஸின் இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் “கோன்ஸ்டாஸின் இன்னிங்ஸ் பார்க்கும் போது 21 ஆண்டுகளுக்கு முன்னர் சேவாக் எங்களுக்கு எதிராக ஆடிய அதிரடி இன்னிங்ஸ் ஞாபகம் வருகிறது. அந்த இன்னிங்ஸில் 233 பந்துகளில் 195 ரன்கள் சேர்த்து தனி ஆளாக எங்களை அடித்து நொறுக்கினார். கோன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி வந்ததால் கவாஜா மீதான அழுத்தம் குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments