இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

vinoth
சனி, 31 மே 2025 (10:17 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதலில் நடந்த குவாலிஃபையர் போட்டியில் ஆர் சி பி அணி பஞ்சாப்பை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.இதையடுத்து நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையருக்கு முன்னேறியுள்ளது.

இன்னும் இரு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் எந்த அணிக் கோப்பையை வெல்லப் போகிறது என்ற ஆருடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.17 ஆண்டுகளாகக் கோப்பையை வெல்லாத ஆர் சி பி அணி வெல்லவேண்டும் என பல தரப்பு ரசிகர்களும் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கான சாதக பாதங்களையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர் சி பி ரசிகர்கள் இப்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை எந்தவொரு இறுதிப் போட்டியிலும் தோற்றதில்லை. இறுதிப் போட்டியில் அவர் இடம்பெற்ற அணிகள் 6 முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன. அதனால் இந்த முறை அவர் ஆர் சி பி அணியில் இருப்பதால் அந்த அதிர்ஷ்டம் தொடரும் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments