Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

vinoth
புதன், 4 ஜூன் 2025 (15:19 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர் சி பி அணி. அந்த அணிக்காகத் தொடர்ந்து 18 ஆண்டுகள் விளையாடிய கோலி முதல் முறையாகக் கோப்பையைக் கையில் ஏந்தியுள்ளார். இது அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்துள்ளது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் அனைத்து பவுலர்களும் சிறப்பாக வீசினர். ஆனால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டை எடுத்து 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதற்குக் காரணம் அவருடைய அதிர்ஷ்டம் என்று சொல்கின்றனர். 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட எந்தவொரு இறுதிப் போட்டியிலும்  அவர் இடம்பெற்ற அணித் தோற்றதில்லை.

இதற்கு முன்புவரை  இறுதிப் போட்டியில் அவர் இடம்பெற்ற அணிகள் 6 முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன. இதையடுத்து நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஏழாவது முறையாக அவருடைய அதிர்ஷ்டம் பலித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments