Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய வீரர் விலகலால் ஆர் சி பி அணிக்குப் பெரும் பின்னடைவு…!

vinoth
திங்கள், 12 மே 2025 (07:43 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஆர் சி பி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தோள்பட்டை வலி காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஆர் சி பி அணியின் பவுலிங் யூனிட்டை பலவீனமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments