Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (08:37 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோற்றது எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. இந்த தோல்வி காரணமாகவே இங்கிலாந்து அணி தொடரில் இருந்தே முதல் சுற்றுடன் வெளியேறியது.

தோல்விக்குப் பின்னர் பேசிய அணிக் கேப்டன் பட்லர் "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அதை நாங்கள் கை விட்டுவிட்டோம். ஜோ ரூட் நம்ப முடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை சிறப்பாக சமாளித்தார். அவருக்கு துணையாக, டாப் 6 பேட்டர்களில் ஒருவர் உதவியிருந்தால் கூட , நாங்கள் போட்டியை வென்றிருப்போம்.” என வருத்தத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கான வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பை அவர் துறந்துள்ளார். அணியை சிறப்பாக வழிநடத்தும் ஒருவரிடம் கேப்டன் பொறுப்பு செல்லவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments