Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளில் அடுத்த சாதனை… ஜாம்பவான் வீரரை முந்திய ஜோ ரூட்!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:17 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். அயர்லாந்து அணிக்கு எதிராக தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் அவர் தற்போது 12400 ரன்கள் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தி ஆறாவது இடத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு முன்பாக சச்சின், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்திறனில் இருக்கும் ரூட் இதே சீரான ஆட்டத்தை தொடர்ந்தால் அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments