Publish Date: Fri, 06 Dec 2024 (12:38 IST)
Updated Date: Fri, 06 Dec 2024 (12:40 IST)
பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் தற்போது அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நடந்துள்ளன ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கிய முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை எல் பி டபிள் யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் கில் மற்றும் கே எல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் விக்கெட் விழுந்ததும் அடுத்தடுத்து கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தற்போது 90 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
vinoth
Publish Date: Fri, 06 Dec 2024 (12:38 IST)
Updated Date: Fri, 06 Dec 2024 (12:40 IST)