தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைசிறந்த பீல்டராக முத்திரை பதித்து 90ஸ் கிட்ஸின் மனசில் ஹீரோ போன்று நீங்கா இடம் பிடித்தவர் ஜாண்டி ரோட்ஸ். இவர் கிரிக்கெட் விளையாடும் போதுதான் கிரிக்கெட் உலகமே இப்படியெல்லாம் கூட பறந்த பறந்து கேட்ச் பிடிக்க முடியுமா என்றே கண்டுபிடித்தது.
அந்த அளவுக்கு அசாத்தியமான ஃபீல்டிங் திறன் கொண்ட அவரை முன்னுதாரணமாகக் கொண்டே பின்னாட்களில் பீல்டர்கள் உருவாக ஆரம்பித்தார்கள் என்றால் மிகையில்லை.
இந்நிலையில் இப்போது 55 வயதாகிவிட்டாலும் அவரின் அந்த பறக்கும் கேட்ச்களுக்கு இன்னும் அவர் விடையளிக்கவில்லை. தற்போது நடந்து வரும் மாஸ்டர்ஸ் டீ 20 லீக் போட்டியில் எல்லைக் கோட்டருகே மீண்டும் தன்னுடைய சூப்பர் மேன் போல அபாரமாக பறந்து வந்து பவுண்டரிக்கு சென்ற பந்தை லாவகமாகத் தடுத்துள்ளார்.