Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (13:18 IST)
பும்ரா அளித்த சமீபத்திய பேட்டி, வீரர்கள் நடத்தை பற்றி எழுப்பிய கருத்துகள் காரணமாக, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகி விட்டது. குறிப்பாக, விராட் கோலி ரசிகர்கள் அவர் வெளியிட்ட கருத்துகளை கேலியாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
 
பொதுவாகவே விக்கெட்டுகள் வீழ்த்தும் போது பந்துவீச்சாளர்கள் உற்சாகத்தில் ஆடிப்பாடுவார்கள். ஆனால், பும்ரா அதற்கேற்பவர் அல்ல. சுனில் நரைனைப் போல், வெற்றியை அமைதியாக எதிர்கொள்பவர். பெரும்பாலான நேரங்களில் வெறும் சிரிப்போடு  நகர்வது அவரது தனிச்சிறப்பு.  
 
இந்த நிலையில் பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘"நானும் போட்டிகளை ஏற்று போராடி வெல்ல விரும்புகிறேன். ஆனால் விளையாட்டு மரியாதையை மீற விரும்பவில்லை. ஆரம்பத்தில் எனக்குப் பயிற்சியாளர்கள் இல்லாததால், தொலைக்காட்சி பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். சிலர்போல் எதிரணியை தூண்டும் நோக்கில் செயல்பட முயற்சி செய்ததுண்டு, ஆனால் அது எனக்குப் பொருந்தவில்லை. கோபத்தில் பந்து வீசுவது என் விதியல்ல. சிந்தனையோடு செயல்படுவது தான் என் வழி. வெற்றிக்கு ஆனந்தப்படலாம், ஆனால் அதற்காக நமக்கு ஏற்புடையமற்ற முறையில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை."
குறிப்பாக ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
பும்ரா நேரடியாக யாரையும் குறிக்கவில்லை. இருந்தாலும், சிலர் இது விராட் கோலியை நோக்கி சொன்னதாக நினைத்து, சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

அடுத்த கட்டுரையில்
Show comments