இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நடந்து வரும் பெர்த் டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார் ஜெய்ஸ்வால்.
இந்நிலையில் அவரின் ஒரு செயலால் கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பொறுமையை இழந்துள்ளார். அடிலெய்டில் இருந்து அடுத்த டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனுக்கு செல்வதற்காக அணி வீரர்கள் எல்லோரும் கிளம்பி ஹோட்டல் லாபியில் காத்திருக்க ஜெய்ஸ்வால் மட்டும் வரவில்லையாம். இதனால் ஒரு கட்டத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பொறுமையை இழந்து கோபமாகக் காணப்பட்டாராம். ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் இல்லாமலே அந்த பேருந்து விமான நிலையத்துக்குக் கிளம்பியுள்ளது.
பின்னர் தாமதமாக வந்த ஜெய்ஸ்வால் கார் மூலமாக விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாராம்.