Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சிக் கோப்பையின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கலக்கிய ஜடேஜா!

vinoth
சனி, 25 ஜனவரி 2025 (08:16 IST)
இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

அதையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் அவர் தற்போது எடுக்கப்படுவதில்லை. அதனால் அவரின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவேக் கருதப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் சில ஆண்டுகள் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் அவர் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஸ்டார் இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்பி வரும் நிலையில் ஜடேஜா மட்டுமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments