Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள்… புதிய உச்சத்தைத் தொட்ட ஜடேஜா!

vinoth
சனி, 2 நவம்பர் 2024 (07:57 IST)
இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

அதையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் அவர் தற்போது எடுக்கப்படுவதில்லை. அதனால் அவரின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவேக் கருதப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் சில ஆண்டுகள் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். தற்போது மும்பையில் நடந்து வரும் வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அவர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரை அவர் முந்தியுள்ளார். அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 314 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments