Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை அணியின் முடிவால் அதிருப்தி… ஆலோசகர் பதவியில் இருந்து விலகினாரா சச்சின்?

Advertiesment
மும்பை அணியின் முடிவால் அதிருப்தி… ஆலோசகர் பதவியில் இருந்து விலகினாரா சச்சின்?
, திங்கள், 18 டிசம்பர் 2023 (07:11 IST)
இரு தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அதற்காக மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஆலோசகருமான சச்சின் டெண்டுல்கரும் இந்த முடிவில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இது சம்மந்தமாக அவர் தன்னுடைய ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்றும் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணி வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

116 ரன்களில் ஆல் அவுட்.. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்! – இந்திய அணி அபாரம்!