Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசியக் கோப்பையில் எடுக்காதது மகிழ்ச்சியே… இஷான் கிஷான் சொல்லும் காரணம்

ஆசியக் கோப்பையில் எடுக்காதது மகிழ்ச்சியே… இஷான் கிஷான் சொல்லும் காரணம்
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:13 IST)
ஆசியக்கோப்பை தொடரில் இளம் வீரரான இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை.

தோனிக்குப் பிறகு சில ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போது இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் அணிக்குள் தனக்கான இடத்தை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் இஷான் கிஷான்.

தொடக்க வீரராகக் களமிறங்கும் அவருக்கு போட்டியாக ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள அவர் “என்னைத் தேர்வு செய்யாதது நியாயமானது என்று நான் உணர்கிறேன்.என்னை தேர்வு செய்யாதது எனக்கு சாதகமானதுதான். இதன் மூலம் நான் அதிக ரன்கள் சேர்த்து மீண்டும் அணிக்குள் திரும்புவேன்." என்று இஷான் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் இந்திய வீரர்கள் விளையாட கூடாது: பிசிசிஐ