இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது போல வெளிநாட்டில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பங்கேற்க கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் வாங்கி உள்ளனர்
குறிப்பாக ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல்சும் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் எந்த ஒரு வெளிநாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கூடாது என்று பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அவ்வாறு விளையாடுவதாக இருந்தால் பிசிசிஐயிடம் செய்யப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு தான் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவிலுள்ள ஐபிஎல் வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது