பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2024 (15:36 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி ரன்களை அதிரடியாக சேர்த்தது.

இதையடுத்து தற்போது தங்கள் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி அடுத்தடுத்து நான்கு தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை இழந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கில், கோலி மற்றும் பண்ட் ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் பும்ரா பற்றி இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணனையாளருமான இஷா குஹா பும்ரா பற்றி சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பும்ரா பற்றி பேசும்போது “ப்ரைமேட்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ப்ரைமேட் என்பது மனிதர்களுக்கு முன்பே தோன்றிய விலங்கினங்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அவரின் இன்வாத ரீதியாக இந்த கமண்ட் கண்டனங்களை எழுப்பிய நிலையில் இன்றைய போட்டியின் போது தன்னுடைய வார்த்தைக்காக அவர் நேரலையில் மன்னிப்புக் கோரினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments