Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய கணக்கு பாக்கி இருக்கு..! இன்று RR Vs CSK பலப்பரீட்சை!

CSK v RR
, வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:10 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்துள்ளது. 7 போட்டிகளில் 5 போட்டிகள் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.

கடந்த 12ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் – சிஎஸ்கே இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 175 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியை சேஸ் செய்ய முடியாமல் 172 ரன்களில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. சிஎஸ்கேவின் ஹோம் க்ரவுண்டில் சிஎஸ்கேவை தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸை இன்று அதன் ஹோம் க்ரவுண்டில் சிஎஸ்கே தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடையே உள்ளது.

அதுபோல சின்னசாமி ஸ்டேடியம், ஈடன் கார்டன் என அனைத்து க்ரவுண்டுகளிலும் ‘அன்புடன்’ குவிந்த மஞ்சள் படையின் ஆதரவு ராஜஸ்தான் ஸ்டேடியத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editb by Prasanth,K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பையில் நியுசிலாந்து அணிக்கு வில்லியம்சன் ஆலோசகராக செயல்படுவார்… பயிற்சியாளர் அறிவிப்பு!