நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி வென்ற நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் பந்து வீச்சு குறித்த பேச்சு எழுந்துள்ளது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. இரண்டாவதாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் இந்த டார்கெட்டை நெருங்க முடியாமல் 152 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இந்த போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்கள் கொடுத்ததால் அர்ஜுன் மீது விமர்சனம் எழுந்தது. ஆனால் இந்த மேட்ச்சில் கவனமாக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 2 ஓவர்களில் 9 ரன்களே கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் -க்கு எதிராக மும்பை அணியின் 6 பவுலர்களும் களமிறக்கப்பட்டனர். அனைத்து பவுலர்களின் பந்துகளில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் சுப்மன் கில். ஆனால் அர்ஜூன் டெண்டுல்கர் பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
அதுபோல இந்த போட்டியில் பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத பவுலர் அர்ஜூன் டெண்டுல்கர் மட்டும்தான்.
சுப்மன் கில்லுக்கும், டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் இடையே காதல் இருப்பதாக கடந்த சில காலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அர்ஜூன் ஓவரில் மட்டும் சுப்மன் கில் பவுண்டரி அடிக்காதது குறித்து பல்வேறு வகையில் பேசிக் கொள்ளப்படுகிறது.