Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இந்தியாவுக்கு மாற்ற பேச்சுவார்த்தையா?

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:46 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது. பாகிஸ்தான் சார்பாக பேசவேண்டிய ஐசிசி இந்திய அணி மூலமாக வரும் வருவாய்க் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கண்டிக்க அஞ்சுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதற்காக திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் ஒரு தொடரை திட்டமிட்டு நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முடியும் என்பதால் இந்த ஆலோசனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments