Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (09:50 IST)
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் எனத்தெரிகிறது. தற்போது கோலி உள்ளிட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோலி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ராஜா தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்கு வந்துவிட்டார். இப்போது என்னால் அதை மட்டும்தான் சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கோலி ஆஸி அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதை ரவி உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments