Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஹர்திக்கைக் கேப்டனாக்கினால் இந்த சிக்கல் இருக்கு” – முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (14:48 IST)
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் இடம்பெறாதது நிரந்தரமானதா அல்லது இலங்கை தொடருக்கு மட்டுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பரவி வரும் தகவல்களின் படி இனிமேல் டி 20 அணிக்கு ஹர்திக்தான் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒருநாள் அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை மட்டுமே ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை நிரந்தர கேப்டனாக்குவது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கியமானக் கருத்து ஒன்றை பேசியுள்ளார். அதில் "ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி, அது ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இருந்தாலும் சரி, இந்தியாவுக்காக இருந்தாலும் சரி மிகவும் சிறப்பாக இருந்தது என்று நான் உணர்ந்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார்.

​​​​அவரது அணுகுமுறையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் அதனுடன் நீங்கள் அவரை நீண்ட கால (நிரந்தர) கேப்டனாக மாற்றினால், அவரது உடற்தகுதியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் அவரைப் பற்றியோ அல்லது அணி நிர்வாகத்தைப் பற்றியோ பேசினாலும், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments