Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: மும்பை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (21:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது  நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக  மாட் மற்றும் பிராபிஸ்சிம்ரன் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

இதில், மாட் 11 ரன்களும், பிராபிஸ்சிம்ரன் 26 ரன்களும், டேட் 29 ரன்களும், லிவிங்க்ஸ்டன் 10 ரன்களும், பாட்டா 41 ரன்களும், சுரான் 55  ரனகளும், ஷர்மா 25 ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து,மும்பை அணிக்கு 215  ரன்கள் வெற்றி இலக்காக் நிர்ணயித்துள்ளது.

மும்பை அணியின் சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர், ஜேசன், ஆர்சர் தலா 1 விக்கெட்டும், கிரீன் சாவ்லா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments