Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரட்டி விட்ட வெங்கடேஷ் ஐயர்.. மிரளாமல் பந்து வீசிய டெண்டுல்கர்! – மும்பை அணி பலே வெற்றி!

Mumbai Indians
, ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (21:10 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று தனது 4வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது. கடந்த 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆனால் ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிக்கப்பட்டபோது மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டது மும்பை ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மும்பை அணியில் இந்த சீசனில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை ப்ளேயிங் 11ல் கொண்டு வரப்படாமல் இருந்தார்.

ஆனால் இன்று அவர் ப்ளேயிங் 11ல் இறக்கப்பட்டதுடன் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஓவரும் அவருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 2 ஓவர்கள் பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 17 ரன்கள் மட்டும் கொடுத்து நிதானமாக பந்து வீசினார். ஆனால் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயரின் அசுர பாய்ச்சலை மும்பை இந்தியன்ஸால் சமாளிக்க முடியவில்லை. 51 பந்துகளில் 104 ரன்களை அடித்து விளாசினார் வெங்கடேஷ் ஐயர். பெரும் முயற்சிக்கு பின் ரிலி மெரிடித்தின் பவுலிங்கில் அடித்த பந்தை டூவன் ஜான்சன் பிடிக்க அவர் அவுட் ஆனார். இதனால் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது.

இறுதியாக 186 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் ஆரம்பம் முதலே நிதானத்தை கடைப்பிடித்தனர். ரோகித் சர்மா ஓபனிங் இறங்கி 2 சிக்ஸ் 1 பவுண்டரி என ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்த வேகத்தில் 20 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனாலும் இஷான் கிஷன் 5 சிக்ஸ் 5 பவுண்டரி அடித்து 58 ரன்கள் வரை நின்று விளையாடினார். பின்னர் வந்த சூர்யகுமார் (43), திலக் வர்மா (30), டிம் டேவிட் (24 – நாட் அவுட்) என மெல்ல ரன்களை சேஸ் செய்து வெற்றியை ஈட்டினர்.

அவுட் ஆகாமல் விளையாடிய டிம் டேவிட் 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என ரன்னை வெற்றி நோக்கி கொண்டு சென்று 17 ஓவர்களிலேயே அணி வெற்றி பெற உதவினார். பவுலிங்கில் கலக்கி அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த மேட்ச்சில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவர் அணியில் நுழைந்த ராசி வெற்றிக்கு காரணம் என சச்சின் ரசிகர்கள் ஒருவிதத்தில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அடுத்தடுத்த போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கரின் பங்களிப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பைக்கு கொல்கத்தா கொடுத்த இலக்கு இதுதான்: வெற்றி யாருக்கு?