இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு ஐபிஎல் தொடரில் அதிக கவனம் செலுத்தி விளையாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் 23 ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளது. இதற்காக 991 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ஏலத்தில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஏலத்தில் பதிவு செய்துகொண்டுள்ள இந்திய வீரர்களில் ஒருவருக்குக் கூட அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்படவில்லை. அதைவிட குறைந்த விலைக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.