Publish Date: Fri, 02 Dec 2022 (17:05 IST)
Updated Date: Fri, 02 Dec 2022 (17:07 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிரபல வீரர் ஒருவர் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் பிராவோ விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ விளையாடினார் என்பதும் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார்.
இந்நிலையில் ஏலத்துக்கும் இப்போது பிராவோ விண்ணப்பிக்கவில்லை. அதனால் பிராவோ ஐபிஎல் தொடருக்கு முழுமையாக விடைகொடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.