Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

Prasanth K
வியாழன், 5 ஜூன் 2025 (09:16 IST)

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பை வென்றுள்ள நிலையில் ஐபிஎல் வெற்றிகள் பெரிதல்ல என விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக விராட் கோலி, ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வேண்டும் என போராடி வரும் நிலையில், ரசிகர்களும் 18 ஆண்டுகளாக கோப்பை வெற்றிக்காக காத்திருந்தனர். 

 

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு சென்று பஞ்சாபை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆர்சிபி. இதை ரசிகர்கள் பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஐபிஎல் கோப்பை வெற்றி குறித்து பேசிய விராட் கோலி “இந்த தருணம் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்த தருணங்களில் ஒன்று. ஆனால் இப்போதும் நான் ஐபிஎல் கோப்பை வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டை விட 5 மடங்கு கீழேதான் மதிப்பிடுவேன். அந்தளவு நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். அதனால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

 

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால் உங்களை பலரும் பாராட்டுவதோடு, உலக கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் நல்ல மரியாதையும் கிடைக்கும். அதற்காக உங்கள் இதயத்தையும், உயிரையும் கொடுங்கள்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments