Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IPL-2024:டாஸ் வென்ற ஆர்.சி.பி அதிரடி முடிவு

Advertiesment
rcp-chennai kings

Sinoj

, வெள்ளி, 22 மார்ச் 2024 (19:58 IST)
2024 சீசன் ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி  டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டிற்காக ஐபில் போட்டி இன்று முதல் வரும் மே 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தி ; இன்றிரவு 8 மணிக்கு நடக்கும்  இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூரு அணி மோதுகிறது.
 
இந்த போட்டியின்போது ஏ.ஆர்.ரஹ்மான், தோனிக்காக இசையமைத்த பாடலை பாடியிருந்தார்.அதேபோல் பாடகர் சோனு நிகமும்  நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
2024 சீசன் ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி டாஸ் வென்று முதலில்  பேட்டிங் தேர்வு செய்துள்ளது.எனவே ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  பந்து வீசுகிறது. 
 
இதுவரை சென்னை கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர்மோதியுள்ளன.
 
இதில், அதிகபட்சமாக சென்னை கிங்ஸ் அணி 20 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. 
 
ஒருபோட்டி முடிவு எட்டப்பட்டாமல் கைவிடப்பட்டது.
 
இவ்விரு அணிகளும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 8 போட்டிகளிலும் விளையாடியுள்ளன இதில், சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியில் வென்றுள்ளது.

இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த அணிதான் ஐபிஎல் கோப்பை வெல்லும்- டி வில்லியர்ஸ் நம்பிக்கை