இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்துவிச்சாளர்கள் அனல் பறக்கவிட்டனர்.
இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்ரிகா அணி 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை. இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் மேற்கொண்டு 65 ரன்கள் சேர்ப்பதற்குள் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது தென்னாப்ரிக்கா அணி.
இந்திய பந்து விச்சாளர்களான பும்ரா, ஷாமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரது அனல் பறக்கும் பந்துவீச்சில் தென்னாப்ரிக்கா அணி சிக்கி சின்னாபின்னமாகியது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா 10 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சிறந்த விக்கெட் கீப்பரான தோனியால் கூட இதுவரை ஒரே டெஸ்டில் 10 கேட்சுகள் பிடிக்கப்படவில்லை. ஆனால் அந்த சாதனையை இன்று சாஹா நிகழ்த்தி காட்டியுள்ளார். இதற்கு நமது வேகப்பந்து வீச்சாளர்களும் துணையாக இருந்தனர்.