Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவரிசைக்காக போட்டிபோடும் 5 வீரர்கள்: இந்திய அணி எப்படி இருக்கும்?

நடுவரிசைக்காக போட்டிபோடும் 5 வீரர்கள்: இந்திய அணி எப்படி இருக்கும்?
, சனி, 1 செப்டம்பர் 2018 (12:44 IST)
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.
 
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. ஆகியக்கோப்பை போட்டியில் இருந்து விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. 
 
கோலிக்கு ஓய்வு அளித்தால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ரோகித் சர்மா, ஷிகர் தவண் இயல்பாகவே அணிக்குள் வந்துவிடுவார்கள். அணியின் மற்றொரு தொடக்க வீரருக்காக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படலாம்.
 
இந்நிலையில், நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள். 
 
புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம். தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும் என தெரிகிறது.
 
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனியும், மாற்று கீப்பராக ரிஷாப் பந்த்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய மகளிர் அணி