நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பவுலர்களின் அசாதாரண பவுலிங்கால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது, இதன் தொடர்ச்சியாக களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய பவுலர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். 6 விக்கெட்டுக்களில் வெறும் 86 ரன்களை எடுத்து பறிதவித்தது இங்கிலாந்து அணி.
அடுத்து மொயின் அலி குர்ரன் ஜோடி நிதானமாக விளையாடியது. மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினர்.
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.