Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (08:39 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இது கிரிக்கெட்டின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த பெருமையைப் பெறும் 11 ஆவது இந்தியக் கிரிக்கெட் வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பாக இந்தியா சார்பாக பிஷன்  சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர்,  அனில் கும்ப்ளே,  ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்,  வினோத் மன்கட், டையானா எடுஜி, வீரேந்தர் சேவாக்,  நீத்து டேவிட் ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments