இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணியும் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து எந்த அணியும் முன்னிலை பெறாத நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் ஆக்ரோஷத்துக்கு அடங்கினர். 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கான இந்த இலக்கை துரத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்டமுடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. கே எல் ராகுல் 33 ரன்களோடு களத்தில் நிற்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 6 விக்கெட்கள் உள்ளன. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.